April 20, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

நீரிழிவை விரட்டும் நாவல்..

5 min read
நாவல் பழம், Blue Berry, Sugar, Diabetes, Effective Medicine, ரத்தப்போக்கு, பேதி, தொண்டைப் புண் , தொண்டை அழற்சி

நாவல் பழம்

சித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர்.

துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது.

கணையத்தில் துவர்ப்பு குறைவதற்குக் காரணம் நமது உணவில் துவர்ப்பு குறைந்து விட்டதுதான் காரணமாகும். வாழைப்பூ துவர்ப்புச் சுவையுள்ளது. அந்தப் பூ காயாகி கனியாகும்போது எப்படி இனிக்கிறது? கனிக்கு முந்தைய நிலை காயாகும். காய்க்கு முந்தியது பூவாகும். ஆக பூவின் சாரமே கனியின் வெளிப் பாடாகும்.

இப்பொழுது சர்க்கரை வியாதிக்கு துவர்ப்புச் சுவையுள்ள நாவல் கொட்டையை மருந்தாக்கிப் பாருங்கள். அதன் அதி அற்புதப் பலனை நீங்களே உணர்வீர்கள்.

நாவல் கொட்டையில் உள்ள “ஜம்புலின்’ என்ற வேதிப்பொருள் இன்சுலினைத் தேவையான அளவில் சுரக்கும் வல்லமையைப் பெற்றது.

தேவையான அளவில் நாவல் கொட்டையை உலர்த்தி அதன் ஓட்டினை நீக்கி பருப்பை மட்டுமே தூள் செய்ய வேண்டும்.

இதில் ஐந்து கிராம் (ஒரு ஸ்பூன்) அளவு காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி குணமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.