அனைத்து வலிகளை நீக்கும்…

Pin It
அரைக்கீரை
நம் உடலுக்குத் தேவையான சக்தியையும், உள்ளுறுப்புகள் செயல்படவும் வளர்ச்சிக்கும், நோய்களைத் தவிர்த்து பலம் மற்றும் ஆரோக்கியத்திற்குக் காரணமாக இருப்பவை சத்துக்களும், வைட்டமின்களுமாகும். இவற்றை நாம் எளிதாக, அதிகளவில் பெற்றிட வழிவகுப்பது கீரைகளாகும். கீரைகளை வைட்டமின்களின் ஆதாரம் என்று கூறலாம். அந்த அளவிற்கு தன்னகத்தே சிறந்த வைட்டமின்கள் உட்பட தாதுப்பொருட்களைக் கொண்டுள்ளன. இங்கு அரைக்கீரை பற்றிய விவரங்களைக் காணலாம்.
தாவரம்: அரைக்கீரையின் தாயகம் இந்தியா ஆகும். இந்தக் கீரை 30 செ.மீ. உயரம் வரை வளரும். தரையெங்கும் படர்ந்து காணப்படும். இது இந்தியா முழுவதும் வளரும் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இக்கீரை ஒரு ஆண்டு பலன்தரும். இக்கீரையின் இலைகளும், தண்டும் சிறுத்தவையாகும். இக்கீரையைக் தேவையானபோது கத்தரித்து எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கீரையை பறித்து எடுக்கலாம்.
தமிழ்: அறுகீரை, கிள்ளுக்கீரை, அரைக்கீரை
இதன் தாவரவியல் பெயர் அமராந்தஸ் டிரைஸ்டிஸ் என்பதாகும்.
அடங்கியுள்ள சத்துக்கள்:
அரைக்கீரையில் நீர்ச்சத்து 87 சதம், புரதச்சத்து 2.8 சதம். கொழுப்புச் சத்து 0.4. சதம். தாதுப் பொருட்கள் 2.4 சதம். மாவுப் பொருட்கள் 7.4 சத அளவிலும் உள்ளன. தாதுப் பொருட்களில் சுண்ணாம்பு, மணிச்சத்து, இரும்பு, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகளவில் உள்ளன.
எப்படிப் பயன்படுத்தலாம்?
கீரையை கூட்டாக, குழம்பாக தயாரிக்கலாம். வதக்கியோ அல்லது பருப்பு சேர்த்து கடைந்தோ உண்ணலாம். இலைச்சாறுடன் தேன் கலந்து அருந்தலாம்.
இக்கீரையிலிருந்து ஒரு வகையான தைலம் எடுக்கப்படுகிறது. இத்தைலம் முடி வளரவும் கண்களுக்கு குளிர்ச்சியூட்டவும் பயன்படுகிறது.
குணங்கள்: பித்தமகற்றி, சுரம் நீக்கி, பால் சுரப்பி, வாய்வு நீக்கி, வாதமடக்கி, வலிநீக்கி, பலமூட்டி, பசியூட்டி போன்ற தன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
மருத்துவப் பயன்கள்:
இக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும்.
இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்த்து, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு மாறும்.
இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், குளிரை இக்கீரை குணப்படுத்தும்.
இக்கீரையை அரைத்து சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.
இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக்கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.
இக்கீரையோடு அதிக வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும்.
இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.
இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும்.
இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.
இக்கீரையை எவ்விதத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.
இருமல், தொண்டைப் புண் இவற்றை அரைக்கீரை குணப்படுத்தும்.
உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும்